அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், பழனி திருமண மண்டப கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர்க.இராமநாதன் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா ,மாநில துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர்.ரொக்ஹையா , மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்ஆடுதுறை.இரா.முருகன் , அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கே.வரத ராஜன், ,மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி. இராஜேந்திரன்,அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் செ. துரைராஜ் பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் கலிஸ்து ராஜ், அரியலூர் நகரக் மதிமுக செயலாளர் இராம.மனோகரன்,ஜெயங்கொண்டம் நகர செயலாளர் எம் ராமலிங்கம், ஒன்றிய மதிமுக செயலாளர்கள் ஆ.அண்ணாதுரை, காட்டுப்பிரிங்கியம் பி.சங்கர், கவிஞர்.எழிலரசன், கு.பிச்சைபிள்ளை, நெ.இரமேஷ்பாபு இராமசாமி, பன்னீர்செல்வம்,பிச்சப்பிள்ளை,தலைமை செயற்குழு உறுப்பினர் இளவரசன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயபால், வி எஸ் கொளஞ்சி, தங்கராசு மோகன்தாஸ், மாவட்ட சார்பு அணி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கஜேந்திரன்,தொண்டரணி சசிகுமார், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே , திருமானூர் முதல் துத்துதூர் வரை ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டி, நீராதாரத்தை பெருக்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்,வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சிறுகனூரில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில், அரியலூர் மாவட்ட,ஒன்றிய நகர ,கிராம கிளை களிலிருந்து அதிக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்,ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் துரை பன்னீர்செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.













; ?>)
; ?>)
; ?>)