வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
கூட்டுறவு துறை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ”முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்களை வழங்கி, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை மூலம்”முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவிக்கையில்:-
தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும்.
”முதலமைச்சரின் தாயுமானவர்” என்ற சிறப்பான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடிமைப் பொருட்களை பெற்று எடுத்துச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பதை அறிந்து அவர்களின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருடகளை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கியுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் 1389 நியாய விலை கடைகள் இருக்கிறது. இதில் 70,311 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டோர் உள்ளனர். நியாய விலை கடைகளை 725 குழுக்களாக பிரித்துள்ளோம். இக்குழுக்களில் உள்ள முதன்மை நியாய விலை கடைகளை தேர்வு ஒரு நியாய விலை கடைக்கு அதிகபட்சமாக 60 குடும்ப அட்டைகள் வீதம் ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ”முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டதின் கீழ் பயன்பெறும் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று நியாய விலை கடை அலுவலர்கள் அவர்களின் முன்னிலையில் மின்னனு தராசின் மூலம் எடையிட்டு குடிமைப் பொருட்களை வழங்குவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் ஆலத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த பாண்டியன் தெரிவிக்கையில்:-
எனது பெயர் பாண்டியன், நான் ஆலாத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகை பெற்று வருகிறேன். மாதந்தோறும் ரேசன் கடைக்கு சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேசன் பொருட்களை வாங்க நான் அல்லது மனைவியும் செல்வோம் கைரேகை உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளதால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே ரேசன் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுவர முடியும். வயதான காலத்தில் எனது மனைவியும் நேரடியாக சென்று ரேசன் பொருட்களை வாங்குவதற்று மிகவும் சிரமப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த தாயுமானவர் திட்டத்தின் மூலம் இந்த மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எங்கள் வீட்டிற்கே வந்து வழங்கினார்கள். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் க்கு நன்றி.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.