• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எலக்ட்ரோ மூலிகை பற்றிய கலந்துரையாடல்..,

காருண்ணியா மருத்துவ பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர். ரவி ஜெஸ்ட்டின் ராஜ் ஏற்பாட்டு கலந்துரையாடல் முகாமிற்கு, நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் முன்னாள் டீன் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் டாக்டர்.நாகராஜன், டாக்டர்.ராபர்ட்சிங், மணவாளகுருச்சி அரு மணல் ஆலையின் மேலாளர் செல்வராஜன். திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் மற்றும் பல்வேறு மருத்துவ பயிற்சி சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய விருந்தினர்கள். இயற்கையை சார்ந்த
பல்வேறு மூலிகை களின் சங்கமத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரோ மருந்து பக்கவிளைவுகள் அற்றது என தெரிவித்தனர்.

காருண்யா மருத்துவம் பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர். ரவி ஜெஸ்ட்டீன்ராஜ் அவரது உரையில். எலக்ட்ரோ மருந்து 1860_ ஆயுர்வேத மருந்தாக உருவாக்கப்பட்டது. எலக்ட்ரோ அறிமுகம் ஆன 20_ ஆண்டுகளுக்கு பின் அருட்தந்தை அகஸ்தீனாஸ் எலக்ட்ரோ மருந்தை இந்தியாவில் அறிமுகம் ஆனது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த எலக்ட்ரோ மருந்து மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த மருந்து பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவ வேண்டும் என்பதற்கே இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

மருத்துவ கல்வியை விரும்பும் மாணவ, மாணவர் இந்த துறையை போதிக்கும் கல்லூரிகளில் பயின்று இளைஞர்கள் மருத்துவர்களாகி, மக்கள் சமுகத்திற்கு மருத்துவம் பணியை செய்யமுடியும் என தெரிவித்தார்.