• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கை சீமை செப்பேடு கண்டெடுப்பு

ByN.Ravi

Apr 28, 2024

திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ளது. இது, சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர், பழநி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது. இதில், மயில், வேல், சூரியன், சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன், பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.