மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் உதவி அலுவலர் திருமுருகன் சுரேஷ் கண்ணா திருப்பரங்குன்றம் நிறைய அலுவலர் உதயகுமார் தல்லாகுளம் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர் மழை வெள்ளம் ஏற்பட்டால் மக்களை எவ்வாறு பாதுகாப்பது கம்மாய் குளங்களில் தத்தளிப்பவரை மீட்பது தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பது பேரிடரில் சிக்கியவர்கள் மீட்டு முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகள் குறித்து விளக்கப்பட்டது.
