• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மகனுக்காக இயக்குநரான ஸ்டண்ட் மாஸ்டர்

Byதன பாலன்

Jul 23, 2023

அங்கிதா புரடக்க்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி” 900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன், எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் ஜாலி பாஸ்டியன் பேசுகிறபோது,

900 படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்து எல்லா கதாநாயகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம்.இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில் மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அந்த சூழலில்இளம் காதல் ஜோடி ஒன்று இந்த சிக்கி சிரமப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம் உருவாகியிருக்கிறது.

வசனகர்த்தா பிரபாகரன் பேசியதாவது:

இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு ஒரு பகுதிதான். என் நண்பர் எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தின் ஒருபகுதி வசனம் எழுதி உள்ளார். இந்த படம் லாக் டவுன் மையமாக வைத்த படம். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு காலகட்டம் பதிவு செய்யப்படும். இப்படம் லாக் டவுன் கால கட்டத்தை பதிவு செய்யும் படமாக இருக்கும். இப்படத்தை மாஸ்டர் ஜாலி பாஸ்டியன்.இயக்க அவரது மகன் விஹான் ஜாலி (அமீத்) நடித்துள்ளார். இவர் தென்னகத்தில் உள்ள எல்லா ஹீரோக்களுக்கும் நிழல் ஹீரோவாக அதாவது டூப் ஹீரோவாக இருந்தவர். அவரை. வைத்து ஜாக்கி ஜான் பாணியில் ஒரு படத்தை ஜாலி மாஸ்டர் இயக்குவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அருமையான கதையை எழுதி இயக்குகிறார். டாக்சி டிரைவராக விஹான் ஜாலி (அமீத்) நடிக்கிறார். ஒரு அழகான காதல், கணவன் மனைவி குடும்ப சூழலில் நிறைவான ஒரு படமாக லாக் டவுன்டைரி உருவாகி இருக்கிறது.