• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரியலூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Byவிஷா

Feb 1, 2023

அரியலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்ய 2-ம் கட்டமாக 15 இடங்களில் இன்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,
அரியலூர் மாவட்டத்தில் கரீப் முஆளு 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கோடாலிக்கருப்பூர் அருள்மொழி, கார்குடி, கங்கைகொண்ட சோழபுரம், காடுவெட்டி, சுத்துக்குளம், கோவிந்தபுத்தூர் மற்றும் முட்டுவாஞ்சேரி, செந்துறை வட்டத்தில், குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் கூடலூர், அரியலூர் வட்டத்தில் கண்டிராத்தீர்த்தம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.