நாகையில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தொடங்கப்பட்ட திண்ணை பிரச்சாரத்தை, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
சட்டப்பேரவை பேரவைத் தோ்தலுக்காக மக்களை சந்திக்கும் விதமாக அதிமுக சாா்பில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் திண்ணை பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை சாா்பில், முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான ஓ.எஸ்.மணியன் இன்று தொடங்கி வைத்தார்.

வெளிப்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயபால், நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

