• Sun. May 19th, 2024

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி:

ByKalamegam Viswanathan

Jun 25, 2023

மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சாலையில் தோண்டப்பட்ட மணலில் சிக்கி பயணிகள் அவதியுறுகின்றனர். மதுரை மேலமடை மருது பாண்டியர் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக, பல இடங்களில் ஹாலோ பிளாக் கற்களைப் பெயர்த்து சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாலையில் தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் குழிகள் சரிவர மூடப்படுவது இல்லையாம். இதனால், அவ்வழியாக செல்லும் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தோண்டப்பட்ட குழிகளில் சிக்கி, அடிக்கடி அவதியூறும் நிலை ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல், மதுரை அண்ணாநகர் மேலமடை வீரவாஞ்சி தெரு, மதுரை மேலமடை வள்ளலார் தெரு ,காதர் மொய்தின் தெரு, அன்பு மலர் தெரு, ஜூபிலிடவுன் சாலைகளில், பள்ளங்கள் தோண்டப்பட்டு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படுவதில்லையாம்.
இதனால் ,இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் சாலையில் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார் தெரிவித்தும், தோண்டப்படும் சாலைகளை சரிவர மூட உத்தரவு பிறப்பிக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இது குறித்து ,மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *