• Sat. May 4th, 2024

கருணாநிதி மீது ஊழல் வழக்கு இருந்தது தெரியுமா? எரிச்சலாக பேசிய ஆர்.பி உதயகுமார்!

முதலமைச்சருக்கு கவர்னரிடம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை பெற்று தர முடியவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடிபழனிச்சாமி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி உச்சப்பட்டியில், எடப்பாடியார் 69 வது  பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்  முன்னிலை வகித்தார். அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், யூனியன் சேமன் லதா ஜெகன், முன்னாள் சேர்மன் ஆண்டிச்சாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி, முன்னால் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார், துணை சேர்மன் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், முசிசோசி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர் பி உதயகுமார் பேசியதாவது,

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கான திட்டங்களை அம்மா அரசு வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  திட்டங்களை அள்ளி, அள்ளி  கொடுப்பவர்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு கானல் நீராக பகல் கனவாக போய்விட்டது. தாலிக்கு தங்க திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு  உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் தற்போது அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் மக்களுக்கு திமுகவால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு வழங்குவார்.

ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது திட்டங்களை நாங்கள் மக்களுக்கு வழங்கினோம். ஆனால் இன்றைக்கு திட்டங்களை கேட்கும் இடத்தில் இருந்து மக்களுக்காக போராடி வருகிறோம்.

முதலமைச்சருக்கு கவர்னரிடம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை பெற்று தர முடியவில்லை.

அரசு மக்களிடத்தில் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் 100 சதவீதம் தோல்வி அடைந்துள்ளது. கவர்னர் எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் நிதானம் இருந்து வார்த்தை பயன்படுத்தி உள்ளார் என்று கடிதம் எழுதியுள்ளார். பதிலுக்கு அவரும் கடிதம் எழுதி உள்ளார். இப்படி கடிதம் எழுவதில் கவனம் செலுத்தி மக்களின் திட்டங்களுக்கு முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை. அமைச்சர் பதவி இருந்தால் சுதந்திரமாக விசாரணை மேற்கொள்ள முடியாது என்று அமலாக்கத்துறை கூறிவிட்டது ஆனால் முதலமைச்சர் எங்களை நீக்கி அதிகாரம் இல்லை என்று கூறி வருகிறார்.

1971-1976 காலகட்டங்களில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது  பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை கொள்முதல் செய்தலில் ஐந்து லட்சம் ஊழல் செய்த வழக்கு இருந்தது . அந்த வழக்கில் தன்னை விடுவிக்க கருணாநிதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 5பேர் நீதிபதிகள் கொண்ட விசாரணையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நான் பொது ஊழியர் வரமுறைக்கு வராததால், இந்திய தண்டனைச் சட்டம் ஊழல் வழக்கிலிருந்து என் மீது வழக்கு தொடர முடியாது என கூறினார் 

 ஆனால் நீதியரசர்களோ அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் பெரும் முதலமைச்சர் பொது ஊழியர் தான் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சரை நியமனம் செய்யும் அதிகாரியாக கவர்னர் உள்ளார்.அதுபோல் அவரை நீக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தனர் .

 இந்தக் தீர்ப்பை நேரம் இருந்தால் ஸ்டாலின் படித்து பார்க்க வேண்டும் .கடைசி புகலிடமாக திமுகவுக்கு வந்த செந்தில் பாலாஜியை காப்பதில் மர்மம் என்ன? செந்தில் பாலாஜிக்காக முதலமைச்சர் ஏன் மக்களை, ஆளுநரை, மத்திய அரசை பகைத்து கொள்ள வேண்டும். தற்போது மக்களுக்காக கேட்கும் இடத்தில் இருக்கும் எடப்பாடியார் விரைவில் மக்களுக்கு வழங்கும் இடத்தில் வருவார் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *