தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக இருந்ததை விட நடிகையான பின் தான் மக்களிடம் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வந்தார்.இந்த கேரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பல பேர் மத்தியில் பிரபலமடைந்தார். இவருக்கு நல்ல ஃபேன் பேஸ்-ம் இருந்தது. சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்தது. காரணம் என்ன என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அர்ச்சனா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு வேல பிக்பாஸுக்கு தான் அம்மணி போறாங்களோ… எதுவானாலும் பிக்பாஸ் வந்த அப்புறம் பார்த்துபோம்…