ஆண்களே சாதிக்க திணறும் சிறுதானிய வணிகத்தில் அசாத்தியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெண் தொழில் முனைவோராக “தனலெட்சுமி” சாதனை படைத்து வருகிறார்.
மருந்தே உணவாக மாறிவரும் நவீன காலத்தில் “உணவே மருந்து ” என்று இயற்கை விவசாயம் மூலம் விளைந்த சிறுதானியங்கள், பழங்கள், காய்கள் மூலம் ஊட்டசத்து மாவுகள், மூலிகை தேனீர் தயாரிக்கும் “மதுரை பெண் தொழில் முனைவோர் தன லெட்சுமி ” .

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள கிளாட்வே சிட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி தனலெட்சுமி ( 32) என்பவர் பொறியியல் பட்டதாரியான இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தனது குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இவரது இயற்கை உணவு சார்ந்த பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறி, பழங்கள் , பூக்கள், ஏ பி சி மால்ட் சத்து உருண்டைகள் தயாரித்து வழங்கினார்.

இவரது வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தனலட்சுமி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பார்த்து தங்களுக்கும் தேவையான உணவு வகைகளை கேட்டு வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.
அருகில் உள்ளவர்கள் கொடுத்த ஆதரவும், நம்பிக்கையும் சுயமாக சொந்த தொழிலை தொடங்க உற்சாகத்துடன் தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.
ஆரம்பத்தில் கடைகளில் நேரிடையாக விற்பனை செய்யும் போது, ஏற்படும் சிரமங்கள் தனலட்சுமிக்கு வருத்தத்தை கொடுத்தாலும், நாளடைவில் அவரது கணவர் விக்னேஷ் மற்றும் தாயார் வசந்தி அளித்த ஊக்கமும், உற்சாகமும் தொழில் ஆர்வத்தின் பேரில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கபூர், துபாய் உள்ளிட்ட 7 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு “பெண் தொழில் முனைவோராக ” உயர்ந்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை போற்றவும், பாரம்பரிய சிறுதானிய உணவுகளை காக்கவும் தனது வீட்டிலேயே சுய தொழில் மூலமாக படித்த பெண்களுக்கு வேலை வாயப்பை வழங்கி வருகிறார்.

தற்போது தனது தொழில் கூடத்தில் இவருடன் பத்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்ணே நிர்வாகியாகவும் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி “பாரதி கண்ட புதுமைப் பெண் ” ணாக செயல்படுகிறார்.
மருந்தே உணவு என்ற தற்போதைய கால நிலையை மாற்றி “உணவே மருந்து” என்பதன் மூலம் “ஆரோக்கிய வாழ்விற்கு பாரம்பரிய மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி அரிசி, தினை, சாமை போன்ற சிறுதானியங்களை மதிப்பு கூட்டி உணவு மற்றும் சத்துமாவுகளாகவும், ஆவாரம்பூ, செம்பருத்தி, சங்கு பூ, நித்திய கல்யாணி மூலிகை தேனீர் என ஏற்றுமதி செய்யும் பெண் தொழில் முனைவோராக
” மதுரை மங்கை ” தனலெட்சுமி “தனி ஒருவராக ” சாதனை புரிந்து வருகிறார்.

இவரது பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாய விளைபொருட்கள் ஜனாதிபதி மாளிகையில் உபசரிக்கும் வகையில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்காக முந்தைய ஜனாதிபதி திரோபதி மூர்மு மற்றும் பிரதம அலுவலகம், மத்திய அமைச்சரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
மேலும் சமீபத்தில் மதுரையில் ச நடைபெற்ற கண்காட்சியில் துவக்கி வைத்து தனலெட்சுமியின் சிறுதானிய அங்காடியை காண வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடமும் பாராட்டும் பெற்று பெண் தொழில் முனைவோராக தனலெட்சுமி உயர்ந்துள்ளார்.

வணிகத் துறையில் கொடிகட்டி பறக்கும் ஆணாதிக்க சத்திக்களின் மேலாண்மையில் சாவால் விடும் வகையில் எந்தவித முன் அனுபவம் வழிகாட்டுதலும் இன்றி ஏற்றுமதி தரம் அளவிற்கு தனது தொழில் திறமையால் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை மதிப்பு கூட்டி விற்பனை சந்தையில் சாதனையை படைத்த பெண் தொழில் முனைவோர் தனி ஒருவள் தனலட்சுமி

இவர் மேலும் வணிகத்தில் சிறக்க மகளிர் தின சாதனையாளராக வாழ்த்தலாமே!.