• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Byகாயத்ரி

Jan 10, 2022

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின் 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ம் தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் நாகூர் ஆண்டவர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து, சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ம் தேதி நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.