கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் விரைந்து முடிவடையும் போது கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,அதே போன்று நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு அமிருத் பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி பிரதமர் மோடி சென்னையில் இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார் என நாகர்கோவில் இரயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நாகர்கோவில் இரயில் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.






