அரியலூர் மாவட்டம், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி, ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராபங்கேற்று, தா.பழூர் ஒன்றியம் மேலமிக்கேல்பட்டியில் ரூ.1.42 கோடி மதிப்பில் தார் சாலை பணி, தா.பழூரில் ரூ.1.99 கோடி மதிப்பில் தார்சாலை பணி, அன்னங்காரன்பேட்டை கிராமத் தில் ரூ.3.30 கோடி மதிப்பில் உயர்மட்டபாலம், சோழன்மாதேவி ஊராட்சியில் ரூ.3.97 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், உதயநத்தம் கிராமத்தில் ரூ.1.00 கோடி மதிப்பில் தார்சாலை பணி, ஜெயங்கொண்டம் ஒன்றியம் கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சியில் ரூ.3.40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், கல்லாத்தூர் ஊராட்சியில் ரூ.13.90 கோடி மதிப்பில் சாலையை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த பகுதிகளில் நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரா.சிவராமன், கோட்டாட்சியர் ஆர் ஷீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, நெடுஞ்சா லைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் எஸ் சரவண ன்,உதவி கோட்ட பொறி யாளர் எஸ்.ஜெயந்தி, உதவி பொறியாளர் டி.ராஜா,ஒன்றிய திமுக செயலாளர் கள் அண்ணா துரை, இரா .மணி மாறன் , கணேசன் ,வருவாய், வட்டாட்சியர் சம்பத்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கஸ்தூரி, இரமேஷ், சந்தானம்,ஒப்பந்ததாரர்கள் வி ஆர் கண்ணன்,விளாகம் பன்னீர் செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)