தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத்தலைவர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கண்காணிப்புக் குழுத்தலைவர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் கண்காணிப்புக் குழு இணைத் தலைவர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக் குமார் (பேராவூரணி), ஜவாஹிருல்லா (பாபநாசம்), ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் முனைவர் பாலகணேஷ், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பேசியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பேருராட்சிகள், நகராட்சிகள். மாநகராட்சிகள், சுகாதாரத்துறை. மாவட்ட தொழில் மையம், மாவட்ட உணவு பொருள் வழங்கல், சமூக பாதுகாப்புத் திட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மறுவாழ்வு நலத்துறை, நில அளவை பதிவேடுகள் துறை, குடிநீர் வடிகால் வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், போன்ற பல்வேறு துறைகளின் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரசு திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம். தூய்மை இந்தியா இயக்கம், தேசிய ரூர்பன் இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம். ஐல் ஜீவன் மிஷன் திட்டம், தெற்கு இரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டங்கள். மாவட்டதிறன் பயிற்சி திட்டம், வேளாண்மைதுறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம். விதை கிராம திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம். தமிழ்நாடு பருப்பு சாகுபடி திட்டம், கூட்டு பண்ணை திட்டம், தமிழ்நாடு பசல் பீமா யோஜனா திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், பாரம்பரிய வேளாண் அபிவிருத்தி திட்டம், தமிழ்நாடு மின்வாரிய திட்டங்கள், பள்ளிக் கல்விதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாற்று திறனாளிகள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், குடிசைமாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் புராதன நகர வளர்ச்சி திட்டம், அம்ரூத் திட்டம். சீர்மிகு நகரம் திட்டப் பணிகள், சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தொற்றா நோய்கள் திட்டம் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம். சுரங்கப் பகுதிகளால் பாதிக்கப்பட்ட பணிகளுக்கான பாரத பிரதமர் திட்டம். மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றின் களப்பணிகளை நல்ல முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சித் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார்.
முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் பிறந்த முதல் 6 வயது வரையிலா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு திட்டப் புத்தகத்தை கண்காணிப்புக் குழுத்தலைவர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் கண்காணிப்புக் குழு இணைத் தலைவர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் வெளியிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, கண்காணிப்புக் குழுத்தலைவர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு இணைத் தலைவர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட கலெக்டர் திருநங்கை யாழினி என்பவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணிநியமன ஆணையும், கடந்த 25.05.2018 அன்று குழந்தை தொழிலாளராக இருந்த சிறுமி சாலிமா பீவி (த/பெ முகமது அலி (லேட்) மீட்கப்பட்டு தற்போது குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். அவருக்கு நீதிமன்றத்தின் மூலம் பணி அமர்த்தியவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.35,000 குழந்தைகளின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடு தொகை திட்டத்தில் செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது முடிவடைந்த நிலையில் சிறுமி.சாலிமா பீவிக்கு வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், அனைத்து நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.