குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில் அமைந்துள்ள சின்ன பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு W. P. 21518/2024 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சின்ன பள்ளம் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தலையாகிய கடமை இதை கண்காணிக்க வேண்டியதுமாவட்ட ஆட்சியரின் பொறுப்பு எது நடந்தாலும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் மனுக்களை வாங்கிக் கொண்டு சரி செய்து தருகிறோம் என்று மக்களை உதாசீனப்படுத்துவீர்கள் என்றால் இந்த அரசுக்கு எதிராகதொடர்ந்து போராட எங்களைதள்ளி விடாதீர்கள். இந்த அரசுக்கு எதிராக வீரம் நிறைந்தபோராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

அதேபோல சுத்தமான நீர் நிலைகளை உருவாக்கித் தர வேண்டும் என விரும்புகிறோம் இன்றைக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு நம்மைப் போன்ற இயக்கங்களை மக்களையும் வெயிலிலே போட்டு வாட்டி வதைக்கிறது. இந்த அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றக் கூடிய பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உண்டு அதை அவர் அலட்சியப்படுத்துகிறார். இதுவரை அமல்படுத்தாததை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாமானிய மக்கள் நல கட்சி. நாடாளும் மக்கள் கட்சி தாயக மக்கள் கட்சி தமிழக மக்கள் நலக் கட்சி உள்ளிட்ட பல தோழமை அமைப்புகள் சமூக ஆர்வலர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.