சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இன்றைய ஆர்ப்பாட்டம் தோழர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கே.காமராஜ் தலைமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் என்.சாத்தையா, விவசாய சங்கம் மாவட்ட பொருளாளர் கோபால், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் பா.மருது, விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் காளையார் கோவில் முருகேசன், ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா, சிவகங்கை ஒன்றிய செயலாளர் மாதவன், சின்ன கருப்பு கல்லல் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட், தொழிற்சங்க செயலாளர் ஏ. ஜி. ராஜா சகாயம், மாதர் சங்க பொறுப்பாளர் ராஜேஸ்வரி குஞ்சரம், கீழப்பாசலை மணி ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.


