• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் கைதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

Oct 19, 2022

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை ஆணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.அப்போது, சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்எல்ஏக்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
இந்நிலையில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எதிர்கட்சிதலைவர் எடப்பாடியார்,மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கழக சட்டமன்றஉறுப்பினர்கள் கைதைகண்டித்து விருதுநகர் அசன் ஹோட்டல் அருகில் (பழையபேருந்துநிலையம்அருகில்) நகர கழகம். கிழக்கு மேற்கு வடக்கு ஒன்றியகழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர் ஒழிக,ஒழிக என கோஷம் எழுப்பியபடியே சென்றனர்.