கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தி.மு.க தேர்தல் அறிக்கை 153-ஐ நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றம் உத்தரவுபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மது விற்பனை இலக்கை திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தை தனியார் நிறுவனத்தில் இருந்து அரசு நிறுவனமாக மாற்றினார்கள். ஆனால் தற்போது FL-2 என்ற பெயரில் தனியார் நிறுவனம் மூலமாக அதிகளவில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

அதே போல பில்லிங் டிவைஸின் தொழில் நுட்பக் குறைகளை சீர் செய்ய வேண்டும், பாட்டில்களை தாங்களே வாங்கி அதற்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை கொடுப்பதனால் மேலும் மேலும் பணி சுமை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.