சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர் விஜய்வசந்த் எம். பி. சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் பல்வேறு ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அது போன்று நாகர்கோவில் திருவனந்தபுரம் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இரணியல் ரயில் நிலையம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த அந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
