தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வலையொளி முக்தார் அகமது நாடார் சமுதாயத்தையும் பெருந்தலைவர் காமராஜரையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தமிழகம் முழுவதும் நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

கூட்டத்திற்குப் பின்னர் பேசிய தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், முக்தார் அகமது மீது அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.


வரும் 23ஆம் தேதி அனைத்து நாடார் சங்கங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், சமூக அமைதியை பாதிக்கும் வகையில் பேசுவோருக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




