விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான் உணவுக்காக சிவகாசி நீரேற்றம் நிலையம் அருகில் ரோட்டை கடக்க முயன்றது.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மான் துடித்துக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூரப் பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்த இரண்டு வயது பெண் மானை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வணக்காப்பாளர் கனகராஜ் இடம் ஒப்படைத்தனர்.




