அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் துணைத் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.