• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரதமரின் தாயார் மறைவு: தமிழகத்தில் பாஜக அலுவலகங்களில் இன்று மாலை அஞ்சலி மாநில தலைவர்அண்ணாமலை அறிவிப்பு

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் பாரதப் பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 வரை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.