• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிமெண்ட் கல்தூண் விழுந்ததில் உயிரிழப்பு..,

BySubeshchandrabose

Sep 15, 2025

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்திலுள்ள கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கூலிதொழில் செய்யும் தம்பதியினர் கோபாலகிருஷ்ணன், அன்னலட்சுமி இவர்களுக்கு 4 வயதில் அஜிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில்.

கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றிருந்த போது வீட்டினருகே உள்ள கோபாலகிருஷ்ணனின் உறவினரான வேலுச்சாமி என்பவர் இடத்தில் ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக இரண்டு சிமெண்ட் தூண்கள் அமைக்கப்பட்டு

அதன் நடுவே கயிறுபோட்டு போர்வை உணர வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இழுத்து விளையாடி கொண்டிருந்த சிறுமி

அஜிதா ஸ்ரீ மீது திடீரென சிமெண்ட் தூண்கள் உடைந்து விழுந்ததில் தலை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு

அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிறுமி சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி சிமெண்ட் கல்தூண்கள் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.