• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கண்களை கட்டி கொண்டு கருப்பு முகமூடி அணிந்தபடி இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கிய பிரபல மேஜிக் கலைஞர் தயா

BySeenu

May 31, 2024

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக, ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு, கருப்பு முகமூடி அணிந்தபடி இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மேஜிக் கலைஞர் ஓட்டினார்.

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மாதேஸ்வரன் ஆலோசனையின் பேரில், ராயல் கேர் மருத்துவமனை சார்பாக கோவையில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,கோவை காந்திபுரம் பகுதியில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக இணைந்து ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் ரோஹித் நாதன்,ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் மணி செந்தில் குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு கருப்பு முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த காந்திபுரம் பகுதியில் இருந்து க்ராஸ்கட் சாலை ,வடகோவை வழியாக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் வரை சென்றார். இது குறித்து,கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கண்களை கட்டி கொண்டு முகமூடி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது தகுந்த பயிற்சி இருந்தால் சாதிக்கலாம் என்று கூறிய அவர், ஆனால் ஹெல்மட் அணியாமல், மது அருந்தி வாகனம் இயக்கினால், எவ்வளவு பயிற்சி இருந்தாலும்,அது பாதுகாப்பானது அல்ல, என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்வு நடைபெறுவதாக தெரிவித்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது மிக முக்கியம் என தெரிவித்தார். மேலும், பெற்றோர்களும் பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்கு வாகனங்கள் வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர், பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோர் வாகனங்கள் இயக்கினால் அவர்களது பெற்றோர்கள் மீதும் போக்குவரத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.