• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆளுநர் சாமி தரிசனம்..!

Byவிஷா

Feb 23, 2023

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
கடலூர், சிதம்பரத்தில் மகா சிவராத்திரியையொட்டி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழாவின் இறுதி நாள் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் ஆளுநார் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினரும் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். ஆளுநர் வருகையையொட்டி அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.