• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025ஆம் ஆண்டு சித்திரை திருவிழா!!

BySeenu

Apr 23, 2025

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.

கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 14ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து,15ம் தேதி கொடியேற்றம், பூச்சாட்டு, 17ம் தேதி அக்னிச்சாட்டு, 18ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா,19ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 20ம் தேதி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா 23ம் தேதி சக்தி கரகம், அக்னி சட்டி ,பால்குடம் கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தண்டுமாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் நடைபயணம் வந்தனர் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிஸ்கோல் குழுக்கள் நிறுவனத் தலைவர் டி எஸ் பி கண்ணப்பன் புஷ்பவல்லி குடும்பத்தார் அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டு மாரியம்மனை தரிசித்தனர்.