• Mon. May 6th, 2024

முதுநிலை கல்வி கற்க முனையும் தலித்.., காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்…

BySeenu

Dec 19, 2023

தலித் முதுகலை பயிலும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டி, தலித் விரோத போக்கினை கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்.

டெல்லியில் இந்திய பிரதமர் மோடி வீட்டை 10 காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்று முற்றுகையிடுவதாக அறிவிப்பு முதுநிலை கல்வி கற்க முனையும் தலித், பழங்குடி மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டும் ஒன்றிய பாஜக அரசின் வன்மச்செயலை கண்டிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.எஸ்.டி. சார்பில் கண்டனம் ஆர்பாட்டம் நடத்தப்பட்டன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பந்தைய சாலை செஞ்சிலுவை சங்கம் எதிராக நடந்த இந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியனர் ஒன்று கூடி, பாஜக ஒன்றிய அரசாங்கத்துக்கு எதிராக முழங்கினர். தலித் மாணவர்களின் கல்வி உரிமை வாழ்வாதாரத்தினை பறிப்பதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள், தலித் மக்கள் கல்வியின் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் போது, கல்வி கடன் தந்து, பட்டி தொட்டி எங்கும் தலித் மாணவ, மாணவிகளை படிக்க வைத்தனர். அறிவுப்பூர்வமாகும், ஆக்கப்பூர்வமாகவும் உருவாக்கி இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில், தலித் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில், 85 ஆயிரம் மாணவர்கள் பாஜக ஆட்சியிலே தற்கொலை செய்து கொண்டிருந்தார். தற்கொலைக்கு தூண்டப்பட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த பாஜக ஆட்சி தலித் மக்களுக்கான விரோத ஆட்சியாக கருதுகின்றோம். அதன் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூரில் காங்கிரஸ் கட்சி எஸ்.சி. எஸ்.டி. பிரிவு காங்கிரசார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றோம். முதல் கட்டமாக கோயம்புத்தூரில் இந்த போராட்டம் நடைபெற்று இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றன. டெல்லியில் 10 ஆயிரம் காங்கிரஸார் ஒன்றிணைந்து, பேரணியாக சென்று, தலித் முதுநிலை மாணவர்களுக்கு எதிரான தொடர் விரோத போக்கினை கண்டுபிடிக்கும் நரேந்திர மோடி வீட்டை முற்றுகை இடுவதாகும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *