• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குமரி ஆட்சியர் அலுவலகம் முன் தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்

இடுகாட்டு இடத்திற்கு பட்டா கொடுப்பதையும், அடுக்குமாடி கட்ட முயற்சிப்பதையும் தடுக்க கோரி தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.
குமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இரத்தின புரத்தில் 300 ஆண்டுகளாக ஆதிதிராவிட தலித் மக்கள் பயன்படுத்திவரும் இடுகாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டவும்,இலவச பட்டா கொடுக்கவும் வருவாய் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும்.இடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி.தலித் உரிமைகள் அமைப்பின் நிறுவன தலைவர் தினகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது . காவல்துறை போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்