“சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் தக்ஷன் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கேரளாவில் இந்தப் திரைபடத்திற்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ் விழாவில் தக்ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே மலையாளத்தில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தமிழில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படங்களில் தக்ஷன் விஜயின் யதார்த்த நடிப்பை பார்த்த படக்குழுவினர், அந்த கதாபாத்திரத்துக்கு இவர் தான் பொருத்தம் என்று முடிவு செய்து, இவரை நடிக்க வைத்துள்ளனர்.
மலையாளத்தில் இவர் நடிக்கும் ‘சொப்பனங்கள் விற்குந்த சந்திரநகர்’ இவருக்கு 2-வது திரைப்படமாகும்.
தற்போது, தக்ஷன் விஜய் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ‘ஐ அம் வெயிட்டிங்’ திரைப்படத்தின் படபிடிப்பு முடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழிலும், மலையாளத்திலும் தொடர்ந்து தக்ஷன் விஜய் நடிப்பில் படங்கள் வெளிவர உள்ளது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)