சென்னையில், நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது. இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருக்கும் கார் ஓட்டுனரின் பெயர் செல்வம் என்பதும் இவர் இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்!