• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு..,

BySeenu

Oct 14, 2025

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை சிறப்பாக நடைபெற்றது இதில் துணை காவல் ஆணையர் திருமதி எம். திவ்யா, ஐபிஎஸ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

500-க்கும் மேற்பட்ட NSS தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் சைபர் மோசடி, ஃபிஷிங், தரவு மீறல்கள் மற்றும் சமூக ஊடகப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள், பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன் நிகழ்வில் சைபர் உலகில் பாதுகாப்பாக இருப்பது அனைவரின் பொறுப்பு என்றும், பாதுகாப்பான கடவுச்சொற்கள், இரு-காரணி அங்கீகாரம் போன்ற எளிய நடைமுறைகள் பெரிய அபாயங்களைத் தவிர்க்க உதவும் என்றும் கூறினர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.