தென்காசி மாவட்டம் தென்காசி பல பகுதிகளில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல நூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் திமுகவின் ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவருமான கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆனைக்கிணங்க..
அஇஅதிமுகழகம் சார்பாக, இன்று செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும். தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா முன்னிலையில் பொதுமக்களின் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.








