• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… கடற்கரை முதல் கல்லூரிகள் வரை எதற்கொல்லாம் அனுமதி!..

By

Aug 21, 2021

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் ஆக்ஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்கும் தமிழக அரசு, செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பில் எதற்கெல்லாம் அனுமதி:

• அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

• ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு அனுமதிக்கப்படும்.

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.