புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்பவர் காய்கறி மற்றும் பழங்கள் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்து அந்த கடையை விளம்பரப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்திலும் அனைத்து விதமான காய்கறிகளும் கிலோ ரூ. 30க்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் இன்று அந்த காய்கறி மற்றும் பழங்கள் நிலையம் புதிதாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையில் சலுகை விலையில் காய்கறிகள் அங்கு வழங்கப்பட்டதால் அதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் அந்த கடையில் குவிந்த பொதுமக்கள் சலுகை விலையில் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அள்ளிச் சென்றனர். மேலும் ரெகுநாதபுரம் புதுவிடுதி சுற்றி 40 கிராம மக்களும் அந்த காய்கறி மற்றும் பல நிலையங்களுக்கு வந்து அவர்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி பயனடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ஒரே நேரத்தில் அந்த கடையில் ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




