பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கான விவசாயி கடன் அட்டை (கேசிசி) வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை, திமுக கழக நிர்வாகிகள் மீனவரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட மீனவர்கள் பயன்பெற்றனர்.





