• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘இயற்கை வளத்துறை’ என்கிற புதிய துறை உருவாக்கம்!

தமிழக அரசின் கீழ் ஏற்கனவே 38 துறைகள் உள்ள நிலையில் ‘இயற்கை வளத்துறை’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 அமைச்சர்கள் கீழ் இருந்த துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இயற்கை வளத்துறை என்கிற புதிய துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்துறை( அமைச்சர் தங்கம் தென்னரசு ) வசமிருந்த சர்க்கரை ஆலை நிர்வாக பிரிவு வேளாண்மைத் துறை அமைச்சருக்கு எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையிடம் ( அமைச்சர் ராஜகண்ணப்பன்) இருந்த விமான நிலையங்கள் நிர்வாகம், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொழிலாளர் நலத்துறை வசமிருந்த வெளிநாட்டு மனித வள கழக நிர்வாகம் சிறுபான்மையினர் நலத்துறை அமைத்திருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் புதிதாக ‘இயற்கை வளத்துறை’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனே , கூடுதலாக இயற்கை வளத்துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழில் துறையில் இருந்த சுரங்கங்கள் மற்றும் கனிமவளம் பிரிக்கப்பட்டு புதிதாக இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளத்துறையின் கீழ் புவியியல், சுரங்கதுறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் அகியவை செயல்படும் என்றும் துறைக்கு தேவையான விதிகள், அறிவுறுத்தல்கள் அனைத்தும் மனித வளத்துறையிடம் இருந்து வழங்கப்படும் என்றும், அரசின் வருவாயை பெருக்கவே புதிதாக இந்தத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.