• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனை

BySeenu

Jul 18, 2024

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனைஜூலை 18 முதல் 23 வரை 6 நாட்கள் நடைபெறுகின்றது.

கோவையில் செயல்பட்டு வரும் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, ஒவ்வொரு ஆண்டும் கிராப்ட் பஜார் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்திய கைவினை பொருள் கலைஞர்கள், நெசவாளர்களை ஊக்குவிக்கவும், பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, பொருட்களை வடிவமைத்தல், சந்தை விற்பனையை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கும் உதவி வருகிறது.

இந்த ஆண்டு கிராப்ட் பஜார் கண்காட்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 18 முதல் 23 வரை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. ஆறு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதில் துணி வகைகள், கைவினை பொருட்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.

கலை பொருட்கள், கைவினை பொருட்கள்: பித்தளை, கண்ணாடி, மரங்களால் ஆன ஓவியங்கள், தோல் செருப்புகள், மொசைக் கண்ணாடிகள், ஹாம்மக்ஸ், மூங்கில் கைவினை பொருட்கள், கோலபுரி செருப்புகள், மர ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் சிப்பிகள், கடல் கொம்புகள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், தாமிர மணிகள், கல் பாத்திரங்கள், நானல் மற்றும் துணி வகைகள்: பாக், தபு, சங்கனேரி பிரின்ட், தோடா, காஷ்மீரி, கலாம்கரி, சந்தேரி, புல்கரி போன்ற என்னற்ற பொருட்களை கிராப்ட் பஜாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.