“மீண்டும் மஞ்ச பை” என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை அம்பத்தூர் சந்தை பகுதியில் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தனியார் மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டு “மஞ்ச பை” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பொது மக்களுக்கும்,சந்தை வியாபாரிகளுக்கும் மேயர் பிரியா மஞ்சள் துணிப்பை வழங்கினார் .
இந்நிகழ்வானது தனியார் மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் தலைமையகத்தின் முக்கிய உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தும் தெரு நாடகம் நடைபெற்றது.