பெரம்பலூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார் அந்த தியாகி என்ற ஸ்டிக்கர் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒட்டப்பட்டது.

விடியா திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு திமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் நடைபெற்று இருப்பதை அம்பலப்படுத்தும் விதமாக பெரம்பலூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திருமால்மருகன் ஏற்பாட்டில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் .அருணாச்சலம் முன்னிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார் அந்த சார் என்று வாசகம் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.