• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,73,80,253 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா மட்டுமின்றி உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8,209 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1738 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவுடன் ஒமிக்ரான் பாதிப்பு 3ஆம் அலையாக பரவி வரும் நிலையில் பல அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.