• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகை தனிஷாவிற்கு கொரோனா தொற்று

Byகாயத்ரி

Nov 30, 2021

தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனிஷா முகர்ஜி. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் தனிஷா வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


கொரோனா பரவல் குறித்து தனிஷா கூறும்போது, “சினிமா துறைக்கு இது மோசமான காலகட்டமாக உள்ளது. படப்பிடிப்புகளில் கவனமாக இருங்கள். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அனைவரும் முககவசம் அணியுங்கள். படப்பிடிப்பு தொடங்கும்போது முககவசத்தை கழற்றுங்கள். ஒவ்வொரு காட்சியை படமாக்கிய பிறகு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். கொரோனாவுக்கு நாம் பயந்து வாழவும் முடியாது. ஆனாலும் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.