கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா காளப்பட்டியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் திரு வி. லட்சுமி நாராயணசாமி, திருமதி சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா. ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஆர் ராஜவேல் அவர்கள் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். பட்டதாரி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் அனைத்து துறைகளிலும் அவர்களது திறமையை வளர்க்க வேண்டும், என்பதையும் இதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதையும் நேரத்தின் கடைபிடிப்புகளையும் அவற்றை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சிறப்பாக தெரிவித்துள்ளார்.

சுகுணா அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் இயக்குனர்&செயலர் டாக்டர் வி. சேகர் ஆகியோர் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை வழங்கினர். பட்டத்தைப் பெறுவதற்கு மாணவர்களை அழைத்தவுடன் அவர்களின் முகமலர்ச்சியும் பெருமையும் அரங்கையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கல்வி நிறுவனத்தின் சேவை, தரமான கல்வியை வழங்குதல், ஆற்றல் சார் அறிவு, புதிய முயற்சி, ஆராய்ச்சி ஆர்வம், சிறந்த சாதனை, மனிதநேயத்தை வளர்த்தல் என பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தின் மைல்கல்லாகவும் தொடர் வெற்றிக்கான அடிக்கல்லாகவும் அமைந்தது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.




