• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

BySeenu

Oct 20, 2024

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 35வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். ஜி. சுமித்ரா, கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுந்தரராமன், இயக்குனர் டாக்டர் நாராயணா கலந்து கொண்டனர்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் S.மலர்விழி தலைமையுரை ஆற்றினார். சிறப்பான கல்வியின் மூலம் மாணவர்களை சிறந்த பொறுப்புள்ள குடிமகனாகவும், வருங்காலத் தலைவர்களை உருவாக்குவதிலும் கல்லூரி நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகத் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டில் வளரும் இளம் பொறியாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி எடுத்துரைத்தார். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

விழாவின் தலைமை விருந்தினராக இந்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY), தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குநரகத்தின் இயக்குநர் ஜெனரல், வெள்ளைப்பாண்டி பங்கேற்று, 902 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதில் 780 இளநிலை மாணவர்களும், 122 முதுநிலை மாணவர்களும் தங்களது பட்டங்களைப் பெற்றனர்.

வேகமாக மாறி வரும் இன்றைய உலகில், ஒவ்வொரு நாளும் மாற்றம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. நாமும் அதற்குத் தகுந்தவாறு, புதியனவைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சவால்களை ஏற்றுக் கொள்ளவும், விடாமுயற்சியுடன் இருக்கவும், தொடர்ந்து தங்களது திறன்களை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கவும் ஊக்குவித்தார்.

ஒவ்வொரு துறையிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப் பட்டனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணா கல்வி குழுமங்களைச் சார்ந்த இதர பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களும், டீன்களும் கலந்து கொண்டனர்.