• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொடர் விடுமுறை : சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் அறிவிப்பு..!

Byவிஷா

Oct 21, 2023

இன்று அக்டோபர் 21 கடைசி சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வருவதால் சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று கடைசி சனிக்கிழமை அக்டோபர் 21ம் தேதி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. திங்கட்கிழமை ஆயுத பூஜை, அடுத்த நாள் விஜயதசமி. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை காரணமாக அக்டோபர் 24ம் தேதி நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல் மறுமார்க்கத்தில் அக்டோபர் 25ம் தேதி சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.