பெரம்பலூர் மாவட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சங்கம் சார்பில், பெரம்பலூர் தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் செங்குணம் ரகு தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் (தமிழ்நாடு அரசு) பொன்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பொன்குமார் பேசுகையில்..,
இந்த கட்டுமான துறைக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் ஒரு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், ஒவ்வொரு ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் அரசு சார்பில் அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை இந்த ரியல் எஸ்டேட் துறை தான் 30 விழுக்காடு உயர்த்துகிறது. எனவே நமது அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டால் எந்த கட்சியாக இருந்தாலும் ஆதரிப்போம், இல்லை என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் எதிர்ப்போம்.
எனவே இந்த துறை வருங்காலத்தில் பாதுகாத்து ஒரு அமைப்பாக உருவாக்கி கொடுக்க பாடுபடுவோம், அவ்வாறு செய்திட்டால் ஒரு அமைப்பாக உருவாக்கி கொடுத்தோம் என்ற பெருமை உங்களையே சாரும் என்று கூறினார்.
மேலும், இந்த அமைப்பிற்கு தொகுதிக்கு இரண்டு நிர்வாகிகள் அமைக்கப்படும் என்றும் மாவட்டத்திற்கு ஒரு நிர்வாகிகள் உள்பட மாவட்டத்திற்கு 500 உறுப்பினருக்காவது அடையாள அட்டை வழங்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.