தேனி மாவட்டம் தமிழகம் – கேரளா எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கம்பம், போடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ரேஷன் கடைகளிலில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தேனிமாவட்ட துணை கலெக்டர் மாரிச்செல்வி தலைமையில், கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் கடத்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவினர், காவல் துறையினர், பொது விநியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை, தடுக்க இரு மாநில எல்லைகளில் அதிகப்படியான அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தப்பட்டு அரிசி கடத்தலை தடுக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.