முத்தரையர் சிங்கப்படை முன்னேற்ற சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் திருக்கட்டளை எம்.பாலகிருஷ்ணன் எம்.பி.ஏ., நிறுவனத்தலைவர்
அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக, மருத்துவ சேவகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மருத்துவரணி இணை செயலாளர்., திரு.ஆர்.அண்ணாமலை எம்.பி.பி.எஸ்., எம்.டி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவை மாபெரும் பொதுக்கூட்டம் போல சிறப்பாக ஏற்பாடு செய்த…
எஸ்.வீரமணி பி.எஸ்.ஸி ., நிறுவனப்பொதுசெயலாளர் எஸ்.சங்கர் அம்பலம் பி.இ.,
கிழக்கு மாவட்ட தலைவர்., செ.குமார் எம்.சி.ஏ., நிறுவனப்பொருளாளர்.,
எம்.பாலமுருகன் வடக்கு மாநகர தலைவர்., எஸ்.ஆர்.எம்.ரமேஷ் கிழக்கு மாநகர தலைவர்., பி.மணிகண்டன் மத்திய மாவட்ட தலைவர்., பெ.முருகேஷன் வடக்கு மாவட்ட தலைவர்., கி.திவாகர் கிழக்கு மாவட்ட செயலாளர்., ரா.ஜீவா கிழக்கு மாவட்ட இணை செயலாளர்., ச.கோபால ஐயப்பன் அரிமளம் ஒன்றிய தலைவர்., மு.வினோத் அரிமளம் ஒன்றிய இளைஞரணி தலைவர்., எம்.கணேசன் திருமயம் ஒன்றிய தலைவர்.,
க.அர்ஜீன் கருப்பையா திருவரங்குளம் மேற்கு ஒன்றிய தலைவர்., பா.சரவணபெருமாள்
திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்., க.சசிக்குமார் குன்றாண்டார்கோவில் ஒன்றிய தலைவர்., சி.சின்னையா திருவரங்குளம் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.,
இரா.மதியழகன் வடக்கு மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர். 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெரியோர்கள் கலந்துகொண்டனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெண்கல சிலையை புதுகை மாநகரில் அமைக்க வேண்டும் என்றும், 29உட்பிரிவுகளை ஒன்றிணைத்து முத்தரையர் என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், முத்தரையர் சமூகத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும், திமுக கட்சியில் முத்தரையர் சமூகத்தினருக்கு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிகப்படுத்த வேண்டும் என்றும், முத்தரையர் சிங்கப்படை சார்பாக டாக்டர் ஆர்.அண்ணாமலை அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிச்சயமாக உங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் முன் வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் முத்தரையர் சிங்கப்படை பரிந்துரைப்படி, வருடத்தில் ஒருவருக்கு தகுதி வாய்ந்த மாணவருக்கு பொறியாளர் படிப்பிற்கான முழு பொறுப்பையும் தானே செய்வதாக உறுதி அளித்துள்ளார். முத்தரையர் சிங்கப்படைகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக முத்தரையர் சிங்கப்படை களம் இறங்கும் என்று நிறுவனத்தலைவர் கூறியுள்ளார்.




